எப்படியாவது வெளியேறுங்கள்… இந்தியர்களை எச்சரித்த தூதரகம் !

387
Advertisement

இந்தியர்கள் கார்கிவ் நகரில் இருந்து இருந்து எப்பாடுபட்டாவது வெளியேறுங்கள் என இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் உச்சகட்டத்தை எட்டி வருகிறது. உக்ரைன் தலைநகரான கீவ் நகரைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகர் மீது ரஷ்யா குண்டு மழை பொழிந்து வருகிறது. ஏவுகணை மற்றும் வெக்யூம் பாம்களை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஏற்கனவே இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

ஆப்ரேஷன் கங்கா என்ற பெயரில் இதுவரை 9 விமானங்கள் மூலமாக கடந்த 26ம் தேதி தொடங்கி, இன்று வரை இந்தியர்களை 3 ஆயிரத்து 352 பேரை மத்திய அரசு இந்தியா அழைத்து வந்துள்ளது.

இந்தியர்கள் கார்கிவில் இருந்து எப்பாடுபட்டாவது மாலை 6 மணிக்குள் (இந்திய நேரப்படி 9.30 மணிக்குள்) வெளியேறுங்கள். வாகனங்கள் கிடைக்காவிடில் நடந்தாவது வெளியேறி உயிரை காத்துக்கொள்ளுங்கள். கார்கிவில் இருந்து இந்தியர்கள் அனைவரும் பெசோசின், பெஸ்லியுடோவ்கா, பப்யே ஆகிய ஊர்களுக்கு உடனே செல்லும் படி இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.