ரஜினி முதல் த்ரிஷா வரை சி.எஸ்.கே-வின் வெற்றியை கொண்டாடி தீர்த்த திரை பிரபலங்கள்…!

165
Advertisement

ஐபிஎல் கோப்பையை 5வது முறையாக வென்றுள்ள சென்னை அணிக்கு பல திரை பிரபலங்கள் , தங்களது வாழ்த்து மழையை பொழிந்து வருகிறார்கள்.


16-வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் – சென்னை அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் குஜராத்தை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது, எனவே எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எல்லா தரப்பினரும் வாழ்த்து மழை யை பொழிந்து வருகிறார்கள்.


எனவே இந்த போட்டியை பார்த்து மகிழ்ச்சியடைந்த திரை பிரபலங்களான ரஜினிகாந்த், ரன்வீர் சிங், விக்னேஷ் சிவன், அனிருத் ரவிச்சந்தர், த்ரிஷா, ஐஸ்வர்யா, வரலட்சுமி சரத்குமார், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள். எனவே ரசிகர்களை போல சினிமா பிரபலங்களும் CSK-வின் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.