தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து, தண்ணீர் திறப்பு 47ஆயிரத்து 995 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது

223

தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து, தண்ணீர் திறப்பு 47ஆயிரத்து 995 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரால், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து 73 ஆயிரத்து 391கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனையடுத்து, தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து 47ஆயிரத்து 995 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால், கல்லணையிலிருந்து அணைக்கரை வரை உள்ள கொள்ளிடம் கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள், ஆறுகளில் இறங்கவோ, குளிக்கவோ, செல்ஃபி எடுக்கவோ கூடாது என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தியுள்ளார்.