ரோகித் சர்மா சில ஆட்டங்களில் ஓய்வு எடுக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்…!

119
Advertisement

மும்பை இந்தியன்ஸ் இதுவரை பங்கேற்ற 11 போட்டிகளில் 6 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பதிவு செய்து தடுமாறி வருகிறது.

இந்த சீசனில் நடந்த 11 போட்டிகளில் ரோகித் சர்மா ஒரு அரை சதம் மட்டுமே அடித்து, சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தநிலையில், ரோகித் சர்மா சில ஆட்டங்களில் ஓய்வு எடுக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.

டெக்னிக்கல் அளவில் எந்த தடுமாற்றமும் இல்லாத நிலையில், மனதளவில் பிரச்சினை இருப்பதே ரோகித் சர்மா இப்படி தருமாறுவதற்கு காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். அவருடைய மனதுக்குள் ஏதோ ஒரு குழப்பம் இருக்கிறது என்றும் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.