உணவு பரிமாறும் ரோபோக்கள்

381
Advertisement

உணவு பரிமாறும் பணிக்கும் வந்துவிட்டன ரோபோக்கள்.

பல்லாண்டுகளாகத் தொழிற்சாலைப் பயன்பாட்டில் அதிகமிருந்த ரோபோக்கள் சமீபகாலத்தில் ஓட்டுநர், பத்திரிகையாளர், வரவேற்பறைப் பணியாளர், கட்டுமானப் பணியாளர், கேஷியர், சுற்றுலா வழிகாட்டி, நூலகர், காவலர், சமையல் கலைஞர் என்று பல்வேறு பணிகளில் ஈடுபடத்தொடங்கியுள்ளன.

அண்மைக்காலத்தில் ரோபோக்கள், சிறப்பங்காடிகளில் சில்லரை விற்பனைப் பணியாளராக செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான நகர உணவகங்களில் உணவு பரிமாறத் தொடங்கியுள்ளன. பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள உணவகங்கள் தெரிவிக்கின்றன.

ஒருமுறை சார்ஜ்செய்தால் 10 மணி நேரம் இந்த ரோபோக்கள் இயங்கும். சேவையில் இல்லாதபோது தானாகவே சென்று சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் வகையில் இந்த ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 3 ஆண்டு உத்தரவாதம் உண்டு.

வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவமாகவும், உணவக உரிமையாளர்களுக்கு ஆட்கள் பற்றாக்குறைப் பிரச்சினையைத் தீர்ப்பதுடன், சிக்கன நடவடிக்கையாகவும் இந்த ரோபோக்களின் வருகை அமைந்துள்ளது.

மருத்துவத்துறையிலும் ஏற்கெனவே இருந்தாலும் அண்மையில் மூட்டு அறுவைச்சிகிச்சை, கண் அறுவைச்சிகிச்சை ஆகியவற்றிலும் ஈடுபடத் தொடங்கி மருத்துவர்களுக்கே சவால்விடும் அளவுக்கு முன்னேறின. அதுமட்டுமன்றி, ரோபோக்கள் கற்பித்தல் பணியிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளன.

சில நாட்களுக்குமுன் சீனா, நீதிபதியாகப் பணியாற்றும் ரோபோவை உருவாக்கி உலகையே திகைக்க வைத்தது.

விருந்தோம்பல் துறையில் ரோபோக்கள் வந்துள்ளது உணவுப் பிரியர்களைக் கவர்ந்துள்ளது.