மிதக்கும் தியேட்டர்

272
Advertisement

ஆசியாவிலேயே முதன்முறையாக காஷ்மீர் தால் ஏரியில் மிதக்கும் தியேட்டர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மிதக்கும் தியேட்டர் ரசிகர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரிலுள்ள தால் ஏரி சுற்றுலாவுக்குப் பெயர்பெற்றது. சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் இங்கு வருவதால், ஏரிக்குள்ளேயே போஸ்ட் ஆபிஸ், ஏடிஎம் போன்ற வசதிகள் ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக ஏரிக்குள்ளேயே தியேட்டர் ஒன்று சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தால் ஏரியில் ஏராளமான படகு இல்லங்கள் உள்ளன. அதில் தங்கி ஏரியின் இயற்கை அழகை சுற்றுலாப் பயணிகள் ரசித்து மகிழ்வார்கள்.

இந்த நிலையில், தால் ஏரியில் திறந்த வெளியில் திரையரங்கம் நிறுவப்பட்டுள்ளது சுற்றுலாப் பயணிகளையும், சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ளோரையும் பெரிதும் கவர்ந்துள்ளது.

கொண்டாட்டத்தில் உள்ளனர் காஷ்மீர் மக்களும் சுற்றுலா ஆர்வலர்களும்.