இறந்த மகளை தோளில் சுமந்து சென்ற தந்தை

298
Advertisement

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், மகளின் உடலுடன் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் பரிதாப நிலை கேமராவில் பதிவாகியுள்ளது. தகவலின் படி , ஏழு வயதான அந்த சிறுமி வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்ததாக தெரிகிறது.

முன்னதாக ,சுர்குஜா மாவட்டத்தின் லகான்பூர் கிராமத்தில் உள்ள சமூக சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டார். சிறுமியின் ஆக்சிஜன் அளவு மிகவும் குறைவாக இருந்ததாகவும் கடந்த சில நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்ததாக சிறுமின் பெற்றோர் கூறுகின்றனர்.

தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது, ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து சிறுமி இறந்ததாக மருத்துவர் தெரிவித்தனர் மேலும் உடலை எடுத்துச் செல்ல வாகனம் வரும் வரை காத்திருக்குமாறு சிறுமியின் தந்தையிடம் கூறப்பட்டது, ஆனால் அவர் சென்றுவிட்டார் என்று மருத்துவர் கூறினார்.

உயிரிழந்த தன் மகளின் உடலுடன் அந்த நபர் சாலையில் நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியது.

இந்த சம்பவம் குறித்து சத்தீஸ்கர் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் T.S சிங் தியோ கூறுகையில்,

மகளின் சடலத்தை தோளில் சுமந்தபடி செல்லும் தந்தையின் வீடியோ மிகுந்த வருத்தத்தை அளித்தது. இந்த விவகாரம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு தலைமை மருத்துவ சுகாதார அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளேன் மேலும் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு விடப்பட்டுள்ளது. மீண்டும் இதுபோன்று சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.