மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் அவசர மேல்முறையீடு

430

கள்ளக்குறிச்சி: மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யும்போது, தங்களது தரப்பு மருத்துவரும் உடனிருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மாணவியின் தந்தை செய்துள்ள முறையீடு நாளை விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை ராமலிங்கம், இன்று மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மறுபிரேத பரிசோதனை செய்யும்போது, தங்களது தரப்பு மருத்துவரும் இடம்பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கவேண்டும் என்றும் அதுவரை பிரேத பரிசோதனைக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் மாணவியி்ன் தந்தை ராமலிங்கம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, மாணவியின் தந்தை தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை நாளை பட்டியலிட வேண்டும் என்று உத்தரவி்ட்டார். உயர்நீதி்மன்றம் அமைத்துள்ள மருத்துவர் குழுவை புறக்கணிக்க இயலாது என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார். மாணவியின் உடலை மறு பிரேதபரிசோதனை செய்வதற்கு தடையில்லை என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.