சென்னை அருகேயுள்ள பனையூர் கிராமத்திலுள்ள
விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நடிகர் விஜய்க்கு
அவரது ரசிகர்கள் முழுவுருவச் சிலை வைத்துள்ளது
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களைக் கொண்ட நடிகர்களுள்
ஒருவர் இளைய தளபதி விஜய். சமீபகாலமாக அரசியலுக்கு வர விஜய்
ஆர்வம் காட்டிவரும் நிலையில், அவருக்கு ரசிகர்கள் சிலை
வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூட்கோட், ஷு உடையில் கண்ணாடி, கிரீடம் அணிந்த நிலையில்
பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவத் தோற்றம்
சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத் தோற்றத்தின் அடிப்படையில்
அமைந்துள்ளது.
விஜய்க்கு அவரது ரசிகர்கள் சிலை வைத்துள்ளது
சினிமா உலகிலும் தமிழக அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது-
கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே மாயாபுரி மெழுகு அருங்காட்சியகத்தில்
சில ஆண்டுகளுக்குமுன்பு நடிகர் விஜயின் மெழுகு சிலையை
அவரது ரசிகர்கள் நிறுவியிருந்தது குறிப்பிடத்தக்கது.