ஹாலிவுட் படத்தில் நடிக்கும் பிரகாஷ் ராஜ்

229
prakash-raj
Advertisement

அப்பாவாக, அண்ணனாக, வில்லனாக என பல கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தையும், ரசிகர்களையும் பெற்றுள்ளார் பிரகாஷ் ராஜ்.

கில்லி படத்தில் வில்லனாக நடித்திருக்கும் இவரின் கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது.

பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருந்த பொன்னியின் செல்வன் படத்திலும் பிரகாஷ் ராஜ் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், தான் ஹாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நடிகர் தனுஷ், நெப்போலியன் மற்றும் ஜிவி பிரகாஷ் ஆகியோர் ஹாலிவுட் படங்களில் பணியாற்றி உள்ளனர். இந்த வரிசையில் தற்போது பிரகாஷ் ராஜும் இணைந்துள்ளார்.