மதுபானம் எதிரில் பிரபல நடிகை: சமந்தா ..! நடிகர் வெளியிட்ட பதிவு.

150
Advertisement

நடிகை சமந்தா, நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் உணவருந்தி மகிழ்ச்சியுடன் நேரத்தை செலவிடும் புகைப்படம் வைரலாகியுள்ளது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக சமந்தா உள்ளார்.இவர் தற்போது தெலுங்கில் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ’குஷி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
குஷி படத்தின் படப்பிடிப்புக்காக விஜய் தேவரகொண்டாவுடன் துருக்கிக்கு சமந்தா சென்றுள்ளார்.அங்கு ஹோட்டலில் இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

உணவுகள் இருக்கும் டேபிளில் மதுபாட்டில்களும் இருப்பதை காண முடிகிறது.சமந்தா வெளியிட்டுள்ள பதிவில், நல்லது கெட்டது, ஏற்ற இறக்கங்கள், வெற்றி தோல்வி என அனைத்தையும் இந்த ஆண்டு பார்த்துவிட்டேன்.

ஆனால் சிலர் தான் உண்மையான நண்பர்களாக உடன் நிற்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவுக்கு ரசிகர்கள் பல்வேறு விதமான கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.