ஆண்களின் அழகை அதிகரித்த முகக் கவசம்

261
Advertisement

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வழிகளில் ஒன்றாக விளங்கும் முகக் கவசம் தற்போது ஆண்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

எப்படித் தெரியுமா?

முகப்பருக்கள், கரும்புள்ளிகள் போன்ற விரும்பத்தகாத அம்சங்களை முகக் கவசம் மறைப்பதால், ஆண்களின் கவர்ச்சி அதிகரிக்கிறது என்னும் பொதுவான நம்பிக்கை ஜப்பான் பெண்களிடம் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

முகக் கவசம் அணிவது ஆண்களின் அழகைக் குறைக்கிறதா, வேறு ஏதேனும் விளைவை ஏற்படுத்துகிறதா என்பதை அறிந்துகொள்ள ஓராண்டுக்கு முன்பு இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்கார்டிஃப் பல்கலைக் கழக உளவியல் பேராசிரியர் டாக்டர் மைக்கேல் லூயிஸ் தலைமையிலான குழு ஜப்பானிய பெண்களிடம் ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வில் பங்கேற்ற பெண்களிடம் 40 ஆண்களின் முகங்கள்,காண்பிக்கப்பட்டன. அவையனைத்தும் அறுவைச் சிகிச்சையின்போது பயன்படுத்தும் நீலநிற முகக்கவசம், துணியாலான முகக் கவசம், முகக் கவசம் அணியாத மற்றும் புத்தகம் ஆகியவற்றால் மறைக்கப்பட்ட ஆண்களின் முகங்கள். அவற்றில் நீலநிற முகக் கவசம் அணிந்துள்ள ஆண்கள் அழகாகத் தெரிவதாக பெண்கள் கூறியுள்ளனர்.

அறுவைச்சிகிச்சையின்போது மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் நோயாளிகளும் மட்டுமே அணிந்துவந்த முகக்கவசம், தற்போது அனைவரும் அணிந்துகொள்ள வேண்டிய கட்டாயமாகிவிட்டது.

இந்த நிலையில், நீலநிற முகக் கவசம் அணியும் ஆண்கள் அழகாகத் தெரிவதாக இளம்பெண்கள் கூறியுள்ளது ஆண்களை உற்சாகம் அடையச்செய்துள்ளது.