உகாண்டாவில், நீண்ட நாட்களாக சம்பளம் தராததால் ஆத்திரமடைந்த பாதுகாவலர் தொழில் துறை அமைச்சரை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…!

96
Advertisement

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவில் தற்போது அதிபர் யோவேரி தலைமயில் ஆட்சி நடந்து வருகின்றது. 

இதில் சார்லஸ் எங்கோலா என்பவர் தொழிலாளர் துறை அமைச்சராக பொறுப்பேற்று வந்துள்ளார்.  இந்நிலையில் தலைநகர் கம்பாலா பகுதியில் உள்ள இவரது வீட்டில் நேற்று காலை எங்கோலாவுக்கும் அவரது பாதுகாவலருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் தகராறாக மாறியது.  இதனால் ஆத்திரம் அடைந்த பாதுகாவலர் தான் மறைத்து வைத்திருந்து துப்பாக்கியால் அமைச்சரை சுட்டதில் சம்பவ இடத்திலேயே அமைச்சர் சார்லஸ் எங்கோலா பலியானர்.

  சத்தம் கேட்டு உள்ளே சென்ற போலிசார் அதிர்ச்சியடைந்தனர்.  உடனடியாக பாதுகாவலரை கைது செய்த போலிசார் விசாரணை நடத்தியதில் பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் ஆத்திரத்தில் பாதுகாவலர் சுட்டுக்கொன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.