பிரான்ஸில் சர்வதேச பட்டம் விடும் திருவிழாவில் கூட்டத்திற்குள் புகுந்த கார் மோதியதில் 11 பேர் படுகாயம் அடைந்தனர்…

94
Advertisement

பிரான்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் பாஸ்-டி-கலாய்ஸ் மாகாணத்தில் உள்ள பெர்க் கம்யூன் நகரில் நேற்று முன்தினம் சர்வதேச பட்டம் விடும் திருவிழா நடைபெற்றது.

இதில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பட்டம் விட்டனர். அப்போது, அங்குள்ள சாலையில் வந்த கார் ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பட்டம் விட்டுக்கொண்டிருந்தவர்களின் கூட்டத்துக்குள் பாய்ந்தது. கார் மோதியதில் பலர் தூக்கி வீசப்பட்டு 11 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.