தோல் கழிவுகள் கலப்பதால், பாலாற்றில் செல்லும் நீர் நுரை பொங்கி காட்சியளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

235

தோல் கழிவுகள் கலப்பதால், பாலாற்றில் செல்லும் நீர் நுரை பொங்கி காட்சியளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பாலாற்றில் செல்லும் நீர் நுரை பொங்கி காட்சியளிக்கிறது. தரைப்பாலத்தின் கீழ், நுரை பொங்கியவாறு தண்ணீர் செல்வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தோல் கழிவுகள் பாலாற்றில் கலப்பதால், தண்ணீர் நுரை பொங்கி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். பாலாற்றில் தோல் கழிவுகளை கலக்கும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.