மரத்துக்குள்ளே குடிதண்ணீர்

217
Advertisement

ஒட்டகம் சில மாதங்கள்வரைத் தண்ணீர் கிடைக்காமல்
இருந்தாலும் கவலைப்படாது. காரணம், எப்போது தண்ணீர்
கிடைக்கிறதோ அப்போது மொத்தமாக சுமார் 130 லிட்டர்
வரை தண்ணீரைத் தனது வயிற்றில் சேமித்துக்கொள்ளும்.

தாகம் ஏற்படும்போது அதிலிருந்து பருகி தாகத்தைத் தணித்துக்
கொள்ளும்.

அதேபோல, பாவோபாப் எனும் அரிய வகை மரங்கள்
உயிர் வாழ்கின்றன. தலைகீழான மரம் என்றும் இந்த
மரம் அழைக்கப்டுகிறது.

இந்த வகை மரங்கள் ஆப்ரிக்காவின் மடகாஸ்கரில் உள்ளன.
இந்த பாவோபாப் மரங்கள்தான் உலகில் மிகப்பெரிய மரங்களாகக்
கருதப்படுகிறது. உயரத்தில் அல்ல, சுற்றளவில்.

இதன் உயரம் 15 அடியிலிருந்து 98 அடிதான் இருக்கும்.
ஆனால், மரத்தின் சுற்றளவு அதிகபட்சம் 154 அடிகள்
வரை இருக்கும். இந்த மரங்களின் இன்னொரு சிறப்பென்ன
தெரியுமா…?

மரத்தின் அடிப்பகுதி மூங்கில்மாதிரி வெற்றிடம் கொண்டதாக
உள்ளது. அந்த வெற்றிடத்தில் நீர் நிறைந்திருக்கும். இந்த
வெற்றிடத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர்
சேமிக்கப்பட்டிருக்கும்.

இது ஒருவகை இலையுதிர் மரம். ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியாவைப்
பூர்வீகமாகக் கொண்டவை இம்மரங்கள். தற்போது ஆசியக்
கண்டத்தின் சில பகுதிகளிலும் வளர்க்கப்படுகிறது.

கோடைக்காலத்தில் இந்த நீர் ஆவியாகிவிடாமல் மரங்களே
பாதுகாக்கின்றன.

மடகாஸ்கர் தீவிலிருக்கும் மக்கள் வறட்சிக்காலத்தில்
இம்மரத்தில் சேமிப்பாகியுள்ள நீரைத்தான் பருகுகின்றனர்.

மரங்கள் பட்டுப் போய்விட்டால் அதன் அடிப்பகுதியைத்
தண்ணீர் சேமிக்கப் பயன்படுத்துகின்றனர். ஆயிரம் வருடப்
பழமையான மரங்களும் இத்தீவில் இருப்பதாகச் சொல்கின்றனர்.

ஆனால், இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. இதற்குக்
காரணம், மரங்களின் வயதைக் கணக்கிடும் GROWTH RINGS
பாவோபாப் மரங்களில் இல்லை.

அண்மைக்காலமாக நோய் மற்றும் பூச்சிகளால் பாதிக்கப்பட்டு
இம்மரங்கள் அதிக எண்ணிக்கையில் பட்டுப் போய்விட்டன. புவி
வெப்பமயமாதல் காரணமாகப் போதிய தண்ணீர் இன்றிப் பட்டுப்
போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.

.