ஒரு விரும்பத்தகாத சம்பவத்தை காரணம் காட்டி, ஒட்டு மொத்தமாக குறை கூற வேண்டாம் – மா.சுப்பிரமணியன்

180

ஒரு விரும்பத்தகாத சம்பவத்தை காரணம் காட்டி, ஒட்டு மொத்தமாக குறை கூற வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவிலேயே அதிகளவில் மருத்துவமனை மருத்துக்கல்லூரிகள் தமிழகத்தில் தான் உள்ளதாக தெரிவித்தார். நாள் ஒன்றுக்கு 6 லட்சம் புற நோயாளிகள் வந்து செல்வதாக குறிப்பிட்ட அவர், ஒரு விரும்பத்தகாத சம்பவம் நிகழ்ந்துவிட்டதாக தெரிவித்தார்.

எனவே அதை காரணம் காட்டி ஒட்டுமொத்தமாக குறை கூற வேண்டாம் என்றும், தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள், திருத்திக் கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.