இந்த பறவைகளை தப்பி தவறி கூட தொட்டு பாக்காதீங்க! ஆளையே காலி பண்ணும் விஷம்..

172
Advertisement

நாய், பூனை விலங்குகளை போலவே பலரும் பறவைகளை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர்.

புறா போன்ற பறவைகள் பல பக்கவிளைவுகளை மனிதர்களுக்கு அளிப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், சில பறவைகளை தொட்டாலே மரணம் அடையும் வாய்ப்புகள் இருப்பதை அண்மையில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அலெட்ரியாஸ் rufinucha மற்றும் ரீஜண்ட் விஸ்ட்லர் ஆகிய இரண்டு பறவைகளும் விஷத்தன்மை வாய்ந்த உணவுகளை சாப்பிட்டு, அவற்றில் இருந்து மேலும் சக்தி மிக்க விஷத்தை உருவாக்கி, தங்கள் இறகுகளில் சேமித்து வைக்கும் வழக்கத்தை கொண்டுள்ளன. நியூரோடாக்சின்ஸ் (Neurotoxins) வகையை சேர்ந்த இந்த விஷத்தை வைத்துள்ள பறவைகள் Indo-Pacific பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றது.

தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் காணப்படும் டார்ட் (Dart) தவளைகளில் உள்ள விஷத்திற்கு ஒத்த விஷம் இந்த பறவைகளிடத்தில் இருக்கிறதாக கண்டறியப்பட்டுள்ளது. Batrachotoxin எனப்படும் இந்த பறவைகளின் இறகுகளில் உள்ள நியூரோடாக்சினை தொட்ட மாத்திரத்தில் கட்டுப்படுத்த முடியாத வலிப்பு ஏற்பட்டு மரணம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.