டோலோ 650 மாத்திரை நிறுவனத்தின் மையங்களில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக சோதனை

251

கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டோலோ 650 மாத்திரை நிறுவனம் மீது வரி ஏய்ப்பு புகார் எழுந்தது.

அதனடிப்படையில் அந்நிறுவத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சோதனையில் பெங்களூருவில் உள்ள நிறுவனத்தில் இருந்து சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதேபோல் தமிழகத்தில் கீழ்ப்பாக்கம், ஓசூர், மும்பை, டெல்லி உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக சோதனை செய்து வருகின்றனர்.

மேலும் டோலோ நிறுவனத்தில் உள்ள அதிகாரிகளின் வீடுகளிலும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.