பாடகி மீது பொழிந்த டாலர் மழை

277
Advertisement

https://www.instagram.com/p/Cbus7JAjCLE/?utm_source=ig_web_copy_link

குஜராத்தி நாட்டுப்புறப் பாடகிமீது டாலர் மழைபொழிந்த
நிகழ்ச்சி ஆன்லைனில் வைரலாகி வருகிறது.

உக்ரைன்மீதான ரஷ்யப் படையெடுப்பு காரணமாக இரண்டாம்
உலகப்போருக்குப் பிறகு ஐரோப்பாவில் மிக வேகமாக அகதிகள்
இடப்பெயர்வு நெருக்கடியைத் தூண்டியுள்ளது. அத்துடன் உக்ரைனில்
சிக்கித் தவிக்கும் மக்களுக்காக உலகெங்கிலும் உள்ள மக்களையும்
அமைப்புகளையும் நிதி திரட்டவும் தூண்டியுள்ளது.

அந்த வகையில் உக்ரைனுக்கு நிதி திரட்டுவதற்காக அமெரிக்காவில்
வாழும் குஜராத் மக்கள் சார்பில் அட்லாண்டா நகரில் மார்ச் 27 ஆம் தேதி
லோல் டேரோ என்ற இசைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் கலந்துகொண்ட நாட்டுப்புறப் பாடகி கீதாபென் ரபாரி
ஏராளமான பார்வையாளர்கள் முன்னிலையில் நிகழ்ச்சியை நடத்தினார்.

அவரது பாடல்களால் கவரப்பட்டதாலும், உக்ரைன் மக்களுக்கு உதவ
வேண்டும் என்ற இரக்கக் குணத்தாலும் பார்வையாளர்கள் டாலர்
நோட்டுகளை கீதாபென் மீது வீசியெறிந்தனர். மழைபோல் பெய்த
அந்த டாலர் நோட்டுகள் அவரைச்சுற்றிக் குவியத்தொடங்கின.

இது பார்வையாளர்களை மட்டுமன்றி அனைவரையும் கவர்ந்தது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவத் தொடங்கி
பாராட்டுகளையும் பெற்றுவருகிறது.