வௌவால்கள் தலைகீழாக தொங்குவது ஏன் தெரியுமா?

925
Advertisement

பறக்கவல்ல ஒரே பாலூட்டி விலங்கு வௌவால்தான். நரிமுகம் கொண்டவை
வௌவால்கள். பழம் தின்னும் இந்த வகை வௌவால்களை ஆங்கிலத்தில் பறக்கும்
நரி என்று குறிப்பிடுகிறார்கள். 70 சதவிகித வௌவால்கள் எலி முகம் கொண்டவை.

வௌவால்களின் கால்களுக்குப் போதிய வலிமை கிடையாது.
இதன் இறக்கைகள் 6 அங்குலம் முதல் 6 அடிவரை நீளம் கொண்டவை.
அதனால் வௌவால்களால் நீண்டநேரம் நிற்கவோ நடக்கவோ முடியாது.
மற்ற பறவைகளைப்போல் இவற்றால் தரையிலிருந்து மேலெழும்பிப்
பறக்க முடியாது.

இவற்றின் வளர்ச்சியற்றக் கால்களும், கனமாக இறக்கைகளும்தான்
இதற்குக் காரணம்.

வளர்ச்சியற்றக் கால்களும் கனமான இறக்கைகளும் இருப்பதால்,
தொங்கிக்கொண்டிருப்பது வௌவால்களுக்கு வசதியாக உள்ளது..
ஆபத்திலிருந்து தப்பிக்கவும் உதவுகிறது.

இப்படித் தொங்கும் வௌவால்களுக்கு அதிக அளவு சக்தியும்
தேவைப்படுவதில்லை. உடனடியாகப் பறப்பதும் எளிதாக இருக்கிறது.

பகல் முழுவதும் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கும் வௌவால்கள்
சூரியன் மறைந்த பிறகு உலவ ஆரம்பிக்கும். இரவிலேயே உணவுண்ணும்.
உணவுக்காக 48 கிலோமீட்டர் தொலைவுவரை பறந்து செல்லும்.

பழத்தைத் தின்றவுடன் சக்கை, தோலைத் துப்பிவிடும். வாழைப்பழம் போன்ற
மிருதுவான பழங்களை முழுமையாகத் தின்றுவிடும். சில வகை வௌவால்கள்
விலங்குகளின் ரத்தத்தை உறிஞ்சி உணவாக உண்ணுகின்றன.

வாய் வழியாக தின்னும் வௌவால்கள் கழிவுகளையும் வாய்வழியாகவே
வெளியேற்றுகின்றன. இந்தக் கழிவுகள் புரதச் சத்து நிறைந்தவை. அதனால்
விவசாயத்துக்கு சிறந்த உரமாகப் பயன்படுகிறது.

சில நாடுகளில் வௌவால்களை உணவாக உண்கிறார்கள்.

தொண்டையிலிருந்து வெளிப்படுத்தும் அதிர்வலைகளால் தடைகளை
உணர்ந்துகொள்ளும் வௌவால்கள் இப்படி 17 மீட்டர் தொலைவிலுள்ள
தடைகளை உணர்ந்துகொள்கின்றன.

பாலூட்டிகளில் அதிவேகமாகச் செல்லக்கூடியது சிறுத்தை. மணிக்கு
120 கிலோமீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்லும். ஆனால், மணிக்கு 160
கிலோமீட்டர் வேகத்தில் வௌவால்கள் பறந்து செல்கின்றன என்பதை
சமீபத்தில் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.