தங்கம் ஒரு பவுன் விலை ஒரு லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் எங்கு என்று தெரியுமா ?

330
Advertisement

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள்  தீவிரமடைந்துள்ள நிலையில், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகள் மற்றும் கட்டணங்கள் தொடர்ந்து  அதிகரித்து வருகின்றன.சமையல் எரிவாயு, எரிபொருள், அத்தியாவசிய பொருட்கள், பஸ் கட்டணங்கள், வண்டி கட்டணங்கள் என அனைத்து விலைகள் மற்றும் கட்டணங்களும் இன்று வரை அதிகரித்து வருவதை காண  முடிகின்றது. இலங்கையில் அமெரிக்க டொலரை நெகிழ்வு தன்மையுடன் பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்திருந்தது.

இதையடுத்து, 203 ரூபாவாக காணப்பட்ட இலங்கை ரூபாவிற்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி,தற்போது   280 ரூபா வரை அதிகரித்துள்ளது. டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள  வீழ்ச்சியானது, இலங்கையின் பொருளாதாரத்திற்கு இன்று வரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான நிலையில்,  தங்கத்தின் விலை படிப்படியாக அதிகரித்து, அதிவுயர் விலையை எட்டியுள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்தாலும், டொலரின் தாக்கம் காரணமாக இலங்கையில் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டு,ஒரு பவுன் தங்கத்தின் விலை  ஒரு லட்சத்து 61 ஆயிரம் ரூபாய்  வரை அதிகரித்துள்ளது.இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக தங்கத்தின் விலை இவ்வளவு   அதிகரித்துள்ளது. இதற்கு முன்னரான சந்தர்ப்பத்தில், இலங்கையில் தங்கத்தின் விலை அதிக பட்சமாக ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாவிற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.