மனைவியுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளாதீர்…. பெண் அமைச்சரின் அதிரடி அறிவுரை

255
Advertisement

மனைவியை அடியுங்கள் என்று பெண் அமைச்சர் அறிவுரை கூறியுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுதொடர்பான வீடியோ ஒன்றைத் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் மலேசியாவில் பெண்கள், குடும்பம், சமூக நலத்துறையின் துணை அமைச்சராக இருக்கும் சிட்டி ஜைலா முகமது யூசுப்.

கணவர்கள் மனைவிகளை எப்படிக் கண்டிக்கிறார்கள் என்கிற தலைப்பில், தான் பேசியுள்ள ஒரு வீடியோவைப் பதிவேற்றியுள்ளார் ஜைலா. அதில், திருமணமான தம்பதிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அந்த அறிவுரையின் ஒருபகுதியாக, அடக்கமற்ற, பிடிவாதமான மனைவிகளை செல்லமாக அடிக்கலாம் என்று கணவர்மார்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

அடங்க மறுத்து, பிடிவாதமாக இருக்கும் மனைவிகளிடம் முதலில் பேசுமாறு கூறியுள்ள அமைச்சர் ஜைலா, சமாதானப் பேச்சுக்கு மனைவி இணங்காவிட்டால், அவர்களுடன் படுக்கையை கணவர்கள் பகிர்ந்துகொள்ளக்கூடாது என்று பகீர் அறிவுரை வழங்கியுள்ளார்.

அதன்பின்னரும் கணவரின் பேச்சைக் கேட்கவில்லையென்றால், மனைவியை செல்லமாக அடிக்கலாம் என்று அதிரடி யோசனை ஒன்றைத் தெரிவித்துள்ளார் அமைச்சர் ஜைலா.

மலேசியப் பெண் அமைச்சர் ஜைலாவின் இந்தப் பேச்சு அடங்கிய வீடியோ வெளியான சிறிதுநேரத்திலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவரைப் பதவி விலக மலேசியப் பெண்கள் அமைப்புகள் வலியுறுத்தின. இணையத்திலும் கடும் எதிர்ப்புகளைப் பதிவிட்டு வருகின்றனர்.