துப்புரவு பணியாளர்களின் வருகை பதிவேட்டில் குளறுபடி சுகாதார அலுவலரை பணியிடை நீக்கம்

314

திருப்பூரில், துப்புரவு பணியாளர்களின் வருகை பதிவேட்டில் குளறுபடி செய்த மண்டல சுகாதார அலுவலரை பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார். திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் பிச்சை என்பவர், துப்புரவு பணியாளர்களின் வருகை பதிவேட்டில், வேலைக்கு வராத துப்பரவு பணியாளர்களை வேலைக்கு வந்ததாக பதிந்து முறைகேடுகள் செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து, மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் பிச்சையை பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் உத்தரவிட்டுள்ளார். பிச்சை மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.