தனுஷ்கோடியில் 58 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய தரைப்பாலம் வெளியே தெரிந்தது

280

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் கடந்த 1964-ம் ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி அன்று ஏற்பட்ட புயல் காரணமாக தனுஷ்கோடி நகரமே முழுமையாக அழிந்து போனது.

இதனால் அப்பகுதியில் செயல்பட்டு வந்த பல கட்டடங்கள் அழிந்து சேதமாகின.

இதன் பின்னர் புயல் ஏற்பட்ட பிறகு தனுஷ்கோடியில் பொதுமக்கள் வாழ்வதற்கும் அரசால் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தனுஷ்கோடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடல் நீர் உள்வாங்கிய நிலையில், தற்போது தரைப்பாலம் ஒன்று வெளியே வந்துள்ளது.

இந்த தரைப்பாலம் 58 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய பாலம் என்று கூறப்படுகிறது.