இட ஒதுக்கீட்டை ஒழித்து விடுவேன்! சர்ச்சையில் சிக்கிய ‘வாத்தி’ இயக்குநர்

221
Advertisement

வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ‘வாத்தி’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்நிலையில், படத்தின் இயக்குநர் இட ஒதுக்கீட்டை ஒழித்து விடுவேன் என கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அண்மையில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில், ‘ஒன்றிய அமைச்சரானால் என்ன செய்வீர்கள்?’ என கேட்கப்பட்ட கேள்விக்கு வெங்கி இவ்வாறு பதிலளித்துள்ளார்.

இட ஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் எனவும் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு கூடாது என்றும் அவர் கூறிய கருத்து சமூகவலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.