விசாரணைக் கைதிகள் பல்பிடுங்கிய பல்வீர் சிங் மீதான வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்….

29
Advertisement

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உள்ளிட்ட காவல்நிலையங்களில் விசாரணைக் கைதிகளின் பல்பிடுங்கிய விவகாரத்தில் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இந்த நிலையில், பல்வீர் சிங் மற்றம் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து  விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது. சம்பவம் நடந்த அம்பாசமுத்திரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் நேரில் சென்று அவர் விசாரணை நடத்தினார்.

உயர்மட்ட குழுவின இடைக்கால அறிக்கையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்தது. இதன் அடிப்படையில், சிபிசிஐடி விசாரளை நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.