தருமபுரி மாவட்டத்தில் பாதுகாப்பு கேட்டு, காதல் ஜோடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்….

134
Advertisement

தருமபுரி மாவட்டம் அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கலையரசியும், கிருஷ்ணகிரி மாவட்டம் தாதம்பட்டி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசனும் காதலித்து திருமணம் செய்துள்ளனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பெற்றோருக்கு தெரியாமல், வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துள்ளனர். இதையடுத்து இருவரும் பாதுகாப்பு கேட்டு, காரிமங்கலம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஆனால் போலீசார் பாதுகாப்பு வழங்க முடியாது என தெரிவித்து திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.