கூரியர் நிறுவனம்போல் செயல்பட்டு சர்வதேச விண்வெளி மையத்துக்கு உணவு சப்ளைசெய்து உபேர் ஈட்ஸ் நிறுவனம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
விண்ணில் சுற்றுவட்டப்பாதையில் செலுத்தப்பட்ட சோயுஸ் விண்கலம் இயங்கிவருகிறது. இது 2023 ஆம் ஆண்டுவரை சந்திரனைச் சுற்றிவந்து ஆய்வுசெய்யும். இந்த Space X விண்கலத்தில் சில பணிகளுக்காக விண்வெளி வீரர்கள் சென்று சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் அவர்களுக்கான உணவைக் கொண்டுசென்று வழங்கியுள்ளது உபேர் ஈட்ஸ் நிறுவனம்.
இதற்காகக் கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி கஜகஸ்தான் நாட்டிலுள்ள பைக்கனூர் ராக்கெட் தளத்திலிருந்து ராக்கெட் ஒன்று புறப்பட்டு 9 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்துள்ளது. அதில் பயணித்து உணவைக்கொண்டு சென்றவர் ஜப்பானிய கோடீஸ்வரர் மேசாவா.
விண்வெளிக்குக் கொண்டுசென்ற உணவுப் பொட்டலத்தில் இனிப்பு சாஸில் சமைக்கப்பட்ட மாட்டிறைச்சி, வேகவைத்த கானாங்கெழுத்தி மீன், மூங்கில் குழாய்களில் வேகவைத்த கோழி. சுடப்பட்ட பன்றி இறைச்சி ஆகியவை இருந்துள்ளன.
பாரிஸ் நகரில் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உபேர் ஈட்ஸ் நிறுவனம் கற்பனைக்கும் எட்டாத சாதனையை நிகழ்த்தி உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.