இந்தியாவின் இறையாண்மை, அமைதிக்கு ஊறுவிளைவிக்க நினைத்தால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்….

87
Advertisement

ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில், 1998ஆம் ஆண்டு மே மாதம் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியது.

இந்த அணுகுண்டு சோதனையின் வெற்றிக்கு உதவியாக இருந்த விஞ்ஞானிகள் உள்ளிட்டோரை கவுரவிக்கும் வகையில், மே 11ஆம் தேதி தேசிய தொழில்நுட்ப தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பொக்ரான் அணுகுண்டு சோதனையின், வெள்ளிவிழா ஆண்டையொட்டி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அமைதியை விரும்புவதாகவும், எந்த நாட்டின் மீதும் இந்தியா முதலில் போர் தொடுத்தது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, அமைதிக்கு ஊறுவிளைவிக்க நினைத்தால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதை உணர்த்தும் வகையிலேயே, பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.