கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் – புதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

394

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக, புதிய சிசிடிவி காட்சி ஒன்று வைரலாகி வருகிறது.

கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவும், சிபிசிஐடி-யும் விசாரித்து வருகிறது. இந்நிலையில் மாணவி மரணம் தொடர்பாக, புதிய சிசிடிவி காட்சி ஒன்று வைரலாகி வருகிறது. 13-ம் தேதி காலையில் மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், 12ஆம் தேதி இரவு மாணவி மாடிக்கு செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது. 12-ம் தேதி இரவு 9.30 மணிக்கு மாணவி ஸ்ரீமதி, படிக்கும் அறையில் இருந்து, மாடிக்கு சோர்வாக ஏறி செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது.