மருமகளின் விபரீத முடிவு மாமியாரின் பரிதாப நிலை!

248
Advertisement

ஆவடியை அடுத்துள்ள அண்ணனூரில் வசித்துவருபவர் லலிதா மகன் வினோத் குமார், மருமகள் லதா உடன் ஒரே வீட்டில் வசித்துவந்தார் .

வினோத் ஆபீஸ் போய்விட ,லதா கடைக்கு சென்றிருந்த போது வீட்டில் லலிதா தனியாக இருந்துள்ளார் .

அந்த சமயம் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் லலிதாவை தாக்கி கழுத்தில் போட்டிருந்த 3 பவுன் செயின் ஐ பறித்துக்கொண்டு போய்விட போலீஸில் புகார் தரப்பட்டது .

விசாரணையில் லதாவே தனது நண்பரிடம் சொல்லி செயின் ஐ பறிக்க சொன்ன உண்மை வெளிவந்து இப்போது கைது செய்யப்பட்டுள்ளார் .
மாமியாருக்கும்,மருமகளுக்கும் வரவு செலவில் கோபதாபம் இருந்ததால் மாமியாரை பழிவாங்க லதா இது போல் நடந்துகொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது .