செல்போனை பயன்படுத்த வேண்டாம் என பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்துகொண்ட மகள்…

228
Advertisement

செல்போனை பயன்படுத்த வேண்டாம் என பெற்றோர் கண்டித்ததால், பாடசாலை மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இந்தியாவின் ஆந்திரா மாநிலம் பொய்னப்பள்ளி நேற்று பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த சிறப்பான மாணவி சமீபத்தில் வெளியான 10 ஆம் வகுப்பு பொது பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய தேர்ச்சி பெற்றிருந்தார்.

இந்நிலையில், பொய்னப்பள்ளி விலாசாகர் பகுதியை சேர்ந்த சேகர்-லாவண்யா ஆகியோரின் மகளான 16 வயதான சரண்யா நேற்று முன்தினம் இரவு பெற்றோருடன் உறங்கியுள்ளார்.
அப்போது அவர் செல்போனை பயன்படுத்திக்கொண்டிருந்தார், தந்தையும் தாயும் அவரை கண்டித்துள்ளனர்.

காலையில் எழுந்து பார்த்தபோது சரண்யாவை காணவில்லை என்பதால், பெற்றோர் அது குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிசாரும் கிராம மக்களும் இணைந்து காணாமல் போன சரண்யாவை தேடி வருகின்றனர்.
அப்போது அவரது உடல் வயல் கிணறு ஒன்றில் காணப்பட்ட நிலையில் நேற்று மாலை மீட்கப்பட்டது.

செல்போனை பயன்படுத்த வேண்டாம் என தந்தை கண்டித்ததன் காரணமாக மனமுடைந்து சரண்யா மார்லபேட்டையில் இருந்து விலாசாகர் செல்லும் வீதியில் வயல் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.