Friday, January 17, 2025

நடனமாடும் திமிங்கலம்

திமிங்கலம், டால்பின் மீன்களின் நடன வீடியோ அனைவரையும் கவர்ந்துவருகிறது.

மனிதர்களைத் தவிர, யானை, குதிரை நடனமாடுவதை நாம் பார்த்திருக்கிறோம்.பறவை இனங்களில் மயில் நடனமாடுவதை நாம் பார்த்திருக்கிறோம். மயில்களின் அந்த நடனம் நமக்குக் கண்கொள்ளாக் காட்சியாக விருந்தளிக்கும்.

தற்போது விலங்குகளும் நடனமாடும் திறன் பெற்றிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதன்ஒருபகுதியாக, திமிங்கலம் ஒன்றும், டால்பின் ஒன்றும் நடனமாடும் வீடியோ ட்டுவிட்டரில் பகிரப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில், அமெரிக்காவின் வடக்குக் கடற்கரையில் ஹம்பேக் திமிங்கலம், டால்பின் இரண்டும் ஒன்றாக சுழன்று சுழன்று நடனமாடுகின்றன.

தண்ணீரைக் கண்டதும் சிறுவர்கள் ஆனந்தத்தில் துள்ளிக்குதிப்பதுபோல, நீருக்குள்ளே வாழும் திமிங்கலமும் டால்பினும் ஆனந்தமாக சுழல்கின்றன. அதனைப் பார்ப்பதற்கு நடனமாடுவதுபோல் அமைந்துள்ளது.

சட்டென்று நம்பமுடியாத இந்த வீடியோ இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது.

Latest news