”அப்பாவின் பிறந்த நாள் எனக்குத்தான்
சொந்தம்” மழலையின் உற்சாகம்

232
Advertisement

https://www.instagram.com/reel/Caz3iNTBWw_/?utm_source=ig_web_copy_link

மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத் தெரியும் மகள்களின்
பாசம் எத்தகையது என்று. தூய்மையான மற்றும் அப்பாவி
ஆத்மாக்களான குழந்தைகளின் செயல்கள் மனதை வருடும்.
அந்த வகையில் மழலையின் இந்த வீடியோ மிகவும் நெகிழ வைத்துள்ளது.

தந்தையின் பிறந்த நாள் எனக்குத்தான் சொந்தம்
என்றுகூறி கொண்டாடிய மழலையின் வீடியோ
ஆன்லைனில் வைரலாகியுள்ளது.

இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள
வீடியோ ஒன்றில் அந்தச் சிறுமி தந்தையின் பிறந்த நாள்
தனக்குச் சொந்தமானது என்றுகூறி கேக்கில் உள்ள
மெழுகுவர்த்தியை ஊதி அணைத்தாள்.

அவளது தந்தையின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக
வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதைப் பார்த்த சிறுமி
எல்லா பெல்லா, ”இன்று அப்பாவின் பிறந்த நாளா?” என்று கேட்க,
அங்கிருந்தவர்கள் ”ஆம்” என்று சொல்ல, ”இது என் இனிய பிறந்த
நாள்” என்றுகூறி குதூகலம் அடைந்தாள்.

எல்லா பெல்லா என்னும் அந்தச் சிறுமியின் இன்ஸ்டாகிராம்
பக்கத்தில் அவளின் தாயார் இந்த வீடியோவைப் பதிவிட்டுள்ளார்.

இந்தச் சிறுமி மாடலிங்கும் செய்துவருகிறார்.