ரிசர்வ் வங்கி அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக இயங்கிய 221 கடன் செயலிகளை ‘சைபர் கிரைம்’ போலீசார் முடக்கி உள்ளனர்…

83
Advertisement

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் அவதூறு தகவல்கள், சட்டவிரோத கருத்துகள் மற்றும் பதிவுகளை சைபர் கிரைம் போலீசார் முடக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

அதன்படி, இதுவரை பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம், டுவிட்டர், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் இருந்து 40 சட்டவிரோத பதிவுகள் மற்றும் கருத்துகள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சமூக வலைத்தளங்களில் முக்கிய பிரமுகர்கள் பற்றி உள்ள 386 அவதூறு வீடியோ பதிவுகளை முடக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கையால் 221 சட்டவிரோத கடன் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளது. ரிசர்வ் வங்கி அனுமதியின்றி, இயங்கி வரும் 61 கடன் செயலிகளையும் முடக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.