ஹீரோவான ‘குக் வித் கோமாளி’ புகழ்

575
Advertisement

‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். இவரின் நகைச்சுவையான நடிப்பு திறமை சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையம் ரசித்து பார்க்க வைத்தது.

ஒரு கட்டத்தில் தங்கள் குடும்பங்களில் ஒருவராகவே புகழை பார்க்க ஆரமித்துவிட்டனர் தமிழ்நாட்டு மக்கள்

இதுவே அவர் வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு கொண்டுசென்றது. டிவிகளில் மட்டுமே அவரை பார்த்து வந்த அவரின் ரசிகர்கள் ,அவரை பெரிய திரையில் பார்த்து ரசித்து வருகின்றனர்.

தற்போதுவரை , விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் வலிமை, பொன் இயக்கத்தில் உருவாகும் விஜய் சேதுபதியின் படம், அருண் விஜய்யின் யானை என அடுத்தடுத்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இதுதவிர பல படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார்.

இந்நிலையில் குறுகிய காலத்தில் பிரபலமான புகழ், தற்போது கதாநாயகனாக அறிமுகமாகிறார் . J4 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சுரேஷ் இயக்கத்தில் ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் புகழ்.கதாநாயகியாக டிக்கிலோனா படத்தில் நடித்த ஷிரின் காஞ்ச்வாலா நடிக்கிறார்.

https://www.instagram.com/p/CbVEIt1v2sY/

இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் புகழ் விலங்குகள் சரணாலய பாதுகாவலராக நடிக்கும் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை அவரே தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். விரையில் படப்பிடிப்பு முடிந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .