பறிபோனதா ஒருங்கிணைப்பாளர் பதவி?

261

ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் ஒருங்கிணைப்பாளர் என்றும் வைத்திலிங்கத்தை முன்னாள் துணை ஒருங்கிணைப்பாளர் என்றும் பேட்டியின்போது சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

மேலும் சி.வி.சண்முகம் பேட்டியில் கூறியதாவது:

ஜெயலலிதா இருந்தவரை அவர் என்ன சொல்கிறாரோ அதுதான் சட்டம், அதை ஏற்றுக்கொள்வோம்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தாமாகவே பறிபோய்விட்டது.

அதிமுக அவைத்தலைவர் தேர்வு செல்லாது என்று வைத்திலிங்கம் கூறியது தவறு. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று விதி இல்லை.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தாமாகவே பறிபோய்விட்டது.

கழக சட்ட விதிகளை இயற்றவும், திருத்தவும், நீக்கவும் பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. கட்சிக்குள் பிளவை ஏற்படுத்திய பன்னீர் செல்வத்தை மன்னித்துதான் ஏற்றோம், அவருக்கு பதவி கொடுக்க வேண்டும் என்று மேலுள்ள விதிகளில் முன்னர் திருத்தம் செய்யப்பட்டது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகிவிட்டதால் அதிமுக பொதுக்குழு புதிய தலைமையை தேர்வு செய்யும்.

காலாவதியானதால் அதிமுகவில் இனி ஓ.பன்னீர்செல்வம் பொருளாளர், பழனிசாமி தலைமை நிலைய செயலாளர் பதவியில் இருப்பார்கள்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆதரவாக 40 பொதுக்குழு உறுப்பினர்களே உள்ளனர். தோற்றவர்கள், விரக்தியின் விளிம்பில் உள்ளவர்கள் எதை வேண்டுமானாலும் பேசுவார்கள்.