துபாயில் இருந்து சென்னை விமானத்தில் நூதன முறையில் தங்கப் பசையை  கடத்தி வந்த பயணியை சுங்கத்துறை கைது செய்தனர். அவரிடமிருந்து 1.128 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

110
Advertisement

துபாயிலிருந்து பயணிகள் விமானம், சென்னை விமான நிலையத்திற்கு வந்தது.

அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, சென்னையைச் சேர்ந்த ஆண் பயணி  ஒருவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.  அந்தப் பயணியை தனி அறைக்கு அழைத்துச் சென்ற சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், பயணியின் உடலின் கால் பகுதியில் போடப்பட்டிருந்த பேண்டை கழற்றிப் பார்த்தனர்.

அதில், 1கிலோ 128 கிராம் தங்க பசை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.