இன்று வெளியாகவுள்ள கியூட் முதுகலை தேர்வு முடிகள்

290

கியூட் முதுகலை தேர்வு முடிகள் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின்படி மத்திய பல்கலைக்கழகங்களில் கலை மற்றும் அறிவியல், பிஸ்னஸ் மேனேஜ்மென்ட் துறைகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு கியூட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கியூட் முதுகலை தேர்வு செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 11 வரை நாடு முழுவதும் 50 தேர்வு மையங்களில் நடைபெற்றது.

நாடு முழுவதும் 9 லட்சத்து 68 ஆயிரத்து 201 மாணவர்கள் தேர்வு எழுதினர்.தமிழ், ஆங்கிலம் உள்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், கியூட் முதுகலை தேர்வு முடிவுகள் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது என யுஜிசி தலைவர் தெரிவித்துள்ளார்.

அதிகாரப்பூர்வ இணையதளமான cuet.nta.nic.in-இல் தேசிய தேர்வு முகமை வெளியிடுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, சேர்க்கை தொடர்பான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.