மருந்து என சொல்லி மூதாட்டியின் கண்களில் ‘ஹார்பிக்’ ஊற்றி நகை பணம் கொள்ளை

88
Advertisement

ஹைத்ராபாத்தில் நச்சாராம் பகுதியை சேர்ந்த ஹேமாவதி ,வயது 73 என்பவர் தனியாக வசித்து வருகிறார். அவரது மகன் லண்டனில் இருக்கிறார். தனது அம்மாவை கவனித்துக் கொள்ள பார்கவி என்ற பெண்ணை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.

சமீபத்தில் ஹேமாவதி கண்கள் வலிப்பதாக கூற அதற்க்கு பார்கவி தன்னிடம் சொட்டு மருந்து இருப்பதாகக் கூறி, ஹார்பிக், ஜண்டு பாம் தைலம் போன்றவற்றை தண்ணீரில் கலந்து கண்களில் சொட்டு மருந்தாக விட்டுள்ளார். 4 நாள்களில், ஹேமாவதியின் கண்கள் சிவந்து பார்வை மங்கிப்போக இதற்குள், ஹேமாவதியின் வீட்டிலிருந்து ருபாய் 40,000 பணம், தங்க நகைகள் போன்றவற்றை பார்கவி திருடி வைத்துக் கொண்டார்.
ஒருகட்டத்தில் ஹேமாவதிக்கு பார்வை பறிபோக ,அவர் மகன் லண்டனிலிருந்து வந்து விசாரித்ததில் விஷயம் வெளியே தெரிய இப்போது பார்கவி கைது செய்யப்பட்டுள்ளார் .