கொரோனா நான்காவது அலை மிக விரைவில் தாக்கும் என IIT வல்லுநர்கள் கணிப்பு

552
Advertisement

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை குறைவதால் நான்காவது அலை எப்போது என்பது குறித்து நிபுணர்கள் கணித்துள்ளனர். கொரோனாவின் நான்காவது அலை ஜூன் 22 ஆம் தேதி தொடங்கலாம் என்றும், அதன் விளைவு அக்டோபர் 24 வரை தொடரும் என்றும் நிபுணர்கள் கூறுகிறார். இருப்பினும், நான்காவது அலை எவ்வளவு கடுமையாக இருக்கும் என்பது, பின்னரே தெரியவரும்.

ஐ.ஐ.டி கான்பூரில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், கொரோனாவின் நான்காவது அலை நான்கு மாதங்களுக்கு நீடிக்கும் என்று கூறியுள்ளனர்.ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 31 வரை நான்காவது அலை உச்சத்தை எட்டும் என்றும் ,அதன் பிறகு குறைய ஆரம்பிக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது . இருப்பினும், அதன் தீவிரம் குறித்து தற்போது எதுவும் கூற முடியாது என்று சொல்லப்பட்டுள்ளது .