Covid தடுப்பூசியே போடாத நாடு

514
Advertisement

வட கொரிய நாட்டில் முதல் covid தொற்று பதிவானதால் நாடு முழுதும் ஊரடங்கை அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு. ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் எதற்காக உடனடி முழு ஊரடங்கு என்ற கேள்வி எழலாம். ஆனால் முதலில் இருந்தே covid தொற்றை கையாள்வதில் வட கொரியா சற்று விநோதமான போக்கையே கடைபிடித்து வருகிறது.

Covid பரவல் அதிகரிக்கும் போது தன்னை பிற நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்தி கொண்டது வட கொரியா. கடந்த இரு வருடங்களாக ஒரே ஒரு covid தொற்று கூட பதிவாகவில்லை என வட கொரியா கூறி வந்தது. மேலும், மார்ச் மாத நிலவரப்படி 64,207 பேருக்கு covid பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அனைவருக்குமே negative result வந்ததாகவும் உலக சுகாதார அமைப்பிடம் தெரிவித்துள்ளது வட கொரியா.

இந்நிலையில், மே மாதம் 8ஆம் தேதி ஒருவருக்கு omicron வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் வட கொரியாவில் covid தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. 2.6 கோடி மக்கள் தொகை கொண்ட நாடான வட கொரியாவில் ஒருவர் கூட தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.