மனம் நினைத்தால்.. அதை தினம் நினைத்தால்.. நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்

238

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் மாணவர் துரைசங்கர். இவர் மூளை முடக்குவாதம் என்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் பிறவியிலிருந்து நடக்கும் திறனை இழந்துள்ளார்.

இந்நிலையில், கோவை அரசுப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த அவர் அண்மையில் தேர்வு எழுதினார். அதன் முடிவும் திங்கட்கிழமை வெளியானது.

இந்நிலையில் மாணவர் துரைசங்கர் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 533 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியிலேயே முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

மேலும் இது குறித்து மாணவர் கூறுகையில் கல்லூரி செல்வதற்கு தனக்கு வாகனம் வழங்கி உதவுமாறு தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

student