மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. மீண்டும் லாக்டவுனா அச்சத்தில் சீன மக்கள்!

277
Advertisement

சீனாவின் வூஹான் மாகாணத்தில்  கடந்த 2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதால், நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் உலகம் முழுவதும் அதிகரித்த கொரோனா தொற்று பாதிப்பு, படிப்படியாக குறைந்தது.

இந்நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் புதிதாக 5,280 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இரண்டு ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச பதிவாகும். குறிப்பாக ஜிலின் மாகாணத்தில் மட்டும் மூவாயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருவதால், ஜிலின், ஷென்சென், டங்குவான் ஆகிய நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

உலக நாடுகள் அனைத்தும்  கட்டுப்பாடுகளை தளர்த்தி இயல்பு நிலைக்கு திரும்ப  சீனாவில் மட்டும்  பல நகரங்களை முடக்கி வருகிறது.  அதிக வேகத்துடன் பரவும் ஒமைக்கரானே பாதிப்பு அதிகரிக்க காரணம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். . உயர் தொழில்நுட்ப நகரமான ஷென்சென்-னில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இங்கு 1 கோடியே 70 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். ஷென்சென்-னில் ஒரு வார காலத்திற்கு பேருந்தும் மெட்ரோ ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதே போல் ஜிலின், என்சைம் நகரங்களும் முடக்கப்படுள்ளன.