இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா

61

இந்தியாவில் புதிதாக 3 ஆயிரத்து 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடுமுழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 ஆயிரத்து 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிகை 4 கோடியே 45 லட்சத்து 97 ஆயிரத்து 498 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 4 ஆயிரத்து 301 பேர் குணமடைந்ததால், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து 32 ஆயிரத்து 671 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு புதிதாக 28 பேர்  உயிரிழந்ததால், பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 701 ஆக அதிகரித்துள்ளது. நாடுமுழுவதும் 36 ஆயிரத்து 126 ஆக குறைந்துள்ளது.

Advertisement