இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது

361
Advertisement

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 80 ஆயிரத்து 67 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 6 ஆயிரத்து 554 பேர் குணமடைந்ததால், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 20 ஆயிரத்து 120 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு மேலும்104 பேர் பலியானதால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 15 ஆயிரத்து 459 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு 44 ஆயிரத்து 488 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.