தேசிய அளவில் கோதுமை தட்டுப்பாடு நிலவுவதாக கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்…

45
Advertisement

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று நியாய விலைக்கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, கூட்டுறவுத்துறை மூலம், வேளாண் கடன், கால்நடை கடன், நகைக்கடன் உள்ளிட்ட 17 வகையான கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். தேசிய அளவில் கோதுமை தட்டுப்பாடு நிலவுவதாக கூறிய அவர், தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் அளவை, மத்திய அரசு பாதியாக குறைத்த குறித்தும் விளக்கம் அளித்தார்.