வரலாற்று வெற்றிக்கு காங்கிரஸ் கொடுத்த விலை 62 கோடி! கர்நாடக கஜானாவின் நிலை என்ன?

114
Advertisement

கர்நாடக மாநிலத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்.

224 தொகுதிகளில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி உறுதி செய்த அமோக வெற்றியை நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் திகட்ட திகட்ட கொண்டாடி வருகின்றனர். அது மட்டுமில்லாமல், 2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு தயாராக, இந்த முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பலம் சேர்த்துள்ளது.

ஆனால், இந்த வெற்றிக்கு விலையாக அடுத்த ஐந்து வருடங்களுக்கு, கர்நாடக அரசு வருடத்திற்கு 62 கோடி செலவு செய்ய நேரிடும். அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், இல்லத்தரசிகளுக்கு மாதம் 2,000 ரூபாய் ஊக்கத் தொகை, வறுமை கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களுக்கு மாதம் 10 கிலோ இலவச அரிசி,

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் 3,000 ரூபாய், டிப்ளமோ படித்த இளைஞர்களுக்கு 1,500 ரூபாய் மற்றும் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்  என வண்ணமயமான வாக்குறுதிகளை வாறி இறைத்து வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி அவற்றை எவ்வாறு நிறைவேற்றப் போகிறது மற்றும் இத்தனை இலவசங்கள் தேவையா என எதிர்க்கட்சிகள் மெல்ல முறுமுறுக்க தொடங்கியுள்ளனர்.

மேலும், மீனவர்களுக்கு ஆண்டுக்கு 500 லிட்டர்  வரை வரி இல்லா டீசல், மீன்பிடி தடை காலத்தில், 6,000 ரூபாய் கடன் போன்ற சலுகைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. விவசாயிகளிடம் இருந்து மாட்டுச்சாணம் ஒரு கிலோ மூன்று ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு உரம் தயாரிக்கும் மையம் அமைக்கப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

பெரிய மாநிலங்களில் ஒன்றான கர்நாடகா, ஜிஎஸ்டி வசூலில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மாநிலத்தின் கடன்சுமை கடந்த பட்ஜெட் நிலவரப்படி 5.6 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, 2026-2027ஆம் நிதி ஆண்டுக்குள், 7.3 லட்சம் கோடி ரூபாயாக உயரும் எனப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.