வரும் 31-ம் தேதி நாடு தழுவிய போராட்டம்

412
Advertisement

இந்தியாவில் கடந்த 4 நாட்களாக உயர்ந்து வரும் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து போராட்டத்தை அறிவித்து உள்ளது காங்கிரஸ்.

விலை உயர்வால் அனைத்து தரப்பு பொதுமக்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால்  அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.இந்நிலையில், எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களில் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது

மூன்று கட்டமாக நடைபெறும் இந்த போராட்டத்தின் நாடு தழுவிய  போராட்டம் வரும் 31-ம் தேதியும்  இதனை தொடர்ந்து ஏப்ரல் 2 முதல் 4-ம் தேதி வரை நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் மாவட்ட வாரியாக உண்ணாவிரதம், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதேபோல் ஏப்ரல் 7-ம் தேதி மாநில தலைநகரங்களில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது .

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கட்சியின் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்களுடன் நடத்திய சந்திப்பிற்குப் பிறகு, கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை மதிப்பாய்வு செய்த பின்னர், குறிப்பாக ஐந்து சட்டமன்றத்தேர்தல்களின்  மோசமான முடிவுகளுக்கு  பிறகு முன்னோக்கிச் செல்வதற்கான திட்டங்கள் குறித்து விவாதித்த பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிவலியுறுத்தி உள்ளது .இது குறித்து  செய்தியாளர் சந்திப்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கூறுகையில் ,

இந்திய மக்கள் மோடி அரசால் துரோகம் இழைக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டுள்ளனர். ஐந்து சட்டமன்றத் தேர்தல்களில் வாக்குகளைப் பெறுவதற்காக பெட்ரோல், டீசல், எல்பிஜி சிலிண்டர், குழாய் இயற்கை எரிவாயு மற்றும் சிஎன்ஜி ஆகியவற்றின் விலையை 137 நாட்களாக அரசாங்கம் மாற்றாமல் வைத்திருந்தது. இப்போது தேர்தல்கள் முடிந்துவிட்டதால், அரசாங்கம் மெதுவாக ஒவ்வொரு நாளும் விலைகளை அதிகரித்

து வருகிறது, என்று  காங்கிரஸ் கட்சின் பொதுச் செயலாளர்  சுர்ஜேவாலா  கூற்றம் சாட்டினார் .

மேலும் , கடந்த ஐந்து நாட்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ₹3.20 உயர்ந்துள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில், பாஜக அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ₹18.70 ஆகவும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ₹18.34 ஆகவும் உயர்ந்துள்ளது  என்று  சுட்டிக்கட்டி பேசினார் .